செம ஸ்டைலு... ராணுவ உடையில் கம்பீரமாக தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் மோடி!

 
மோடி தேஜஸ் போர் விமானம்

செம ஸ்டைலிஷாக, கம்பீரமாக ராணுவ உடையில் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் இந்திய பிரதமர் மோடி. இன்று கர்நாடகாவில், ஹெச்ஏஎல் விமான தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். கம்பீரமாக பிரதமர் மோடி ராணுவ உடையில்  நடந்து வருகிற, போர் விமானத்தில் இருக்கிற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு சென்றுள்ள நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்-லின் உற்பத்தி நிலையம் பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், ‘’தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது’’ என குறிப்பிட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web