பகீர் வீடியோ... ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி பலி!

 
ஆழ்துளை கினறு சிறுமி

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி, இன்று அதிகாலை மீட்பு பணியினரால் உயிருடன் மீட்கப்பட்ட நிலையிலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டம், போடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்லியா ரசோடா கிராமத்தை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை மஹி. இந்தக் குழந்தை நேற்று மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

குழந்தை மஹி, 22 அடி ஆழத்தில் சிகிக்கொண்டிருந்தாள். அவளை மீட்பதற்காக பக்கவாட்டில் 25 அடி வரை இரு குழிகள் தோண்டப்பட்டன. மேலும், குழந்தைக்கு சுவாசக்காற்று கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணற்று குழிக்குள் ஆக்ஸிஜனும் செலுத்தப்பட்டது. குழந்தையை மீட்பதற்கு தேவையான நடவடிக்கையை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் செளஹானும் விரைவுபடுத்தினார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் பெண் குழந்தை விழுந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குழந்தை மஹி மீட்கப்பட்டாள். உடனே அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் போபாலில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் அந்தக் குழந்தை சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தாள்.

பிரதே பரிசோதனைக்குப் பின்னர் குழந்தை மஹியின் உடல் அவுளது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜ்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் மீனா தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web