பகீர் வீடியோ... தேர்வுத்தாள்களைத் தராததால் நண்பனை அடித்து கோமா நிலைக்குத் தள்ளிய மாணவன்!

தேர்வுக்கு தயாராவதற்காக, மாதிரி வினாத்தாள்களைக் கேட்டு, சக வகுப்பு தோழன் தர மறுத்ததால், அவனை கொலைவெறியில் அடித்து தாக்கி, கோமா நிலைக்கு தள்ளிய மாணவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான். அடிப்பட்ட மாணவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் சதர்காட் பகுதியில் தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். சக வகுப்புத் தோழனான கைஃப், தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்து விட்டார்.
Horrific, a student Syed Arif is battling for life after being brutally attacked by his classmate Kaif at their SIS college, after he refuses to give some exam practice papers, under @shochaderghat ps limits in #Hyderabad.
— Surya Reddy (@jsuryareddy) September 8, 2023
Arif's sister seeks justice from @hydcitypolice. #CCTv pic.twitter.com/9hLwrN4TLF
இதனால் ஆத்திரமடைந்த கைஃப் ஆரிப்பை கடுமையாக தாக்கிவிட்டார். இதனை சக மாணவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். கைஃப் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆரிப்பை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஆரிப் கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து ஆரிப்பின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் ஆரிப்பை கைஃப் தாக்குவது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!