துடிதுடித்து சுருண்டு விழுந்த இளம் மருத்துவர்.... மாரடைப்பால் மரணம்!

 
அபிஷேக்

உத்தரபிரதேச மாநிலத்தில், தன்னுடன் படித்த பழைய நண்பர்களைச் சந்திக்க சென்ற இளம் மருத்துவர், பேசிக் கொண்டிருக்கும் போதே துடிதுடித்து, சுருண்டு விழுந்து  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திவோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பலிராம் குமார், மாவட்ட பஞ்சாயத்தின் கூடுதல் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி மால்தி தேவி. இவர்களுக்கு அசுதோஷ் குமார், அபிஷேக் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அபிஷேக் குமார் கடந்த 2016ம் ஆண்டு பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று, தியோரியா ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

HeartAttack

இந்நிலையில், தனது காரை சர்வீஸ் செய்வதற்காக கோரக்பூரில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மருத்துவக் கல்லூரியின் பழைய நண்பர்கள் சிலரின் அழைப்பின் பேரில் விடுதிக்கு சென்றார். அங்கே உணவு அருந்திய சிறிது நேரத்தில் அபிஷேக் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அசிடிட்டி மருந்தை உட்கொண்டார்.

தொடர்ந்து, வலி இருந்ததால் அவரது நண்பர் அபிஷேக் குமாரை மருத்துவமனைக்கு மோட்டர் பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்த நிலையில், மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

டாக்டர் அபிஷேக் குமார் மரணம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ் குமார் கூறுகையில், இது மிகவும் வருத்தமான சம்பவம். டாக்டர் அபிஷேக் இந்தக் கல்லூரியின் மாணவர். இறைவன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும், குடும்பத்தாருக்கு இழப்பைத் தாங்கும் ஆற்றலை வழங்கட்டும். பிரேத பரிசோதனைக்கு பின் உள்ளுறுப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று கூறினார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web