உஷார்... காலை தூங்கி எழுந்ததும் இதையெல்லாம் செய்யாதீங்க!

 
காலை எழுந்திருத்தல்

இத்தனை காலங்களாய், நாம் தூங்கி எழும் போது நமக்கு பிடித்த மாதிரி தான் இயங்கி வருகிறோம். ஆனால், காலையில் தூங்கி எழுந்ததும் வாஸ்து படி இதையெல்லாம் செய்தால் துரதிர்ஷ்டம் துரத்தும், ஆரோக்கியம் கெடும் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படி எதையெல்லாம் சொல்றாங்க... நம்ம லிஸ்ட்ல அதெல்லாம் இருக்கா என்று பார்க்கலாம் வாங்க...

எத்தனைக் கோடி பணம் இருந்தாலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தானே முக்கியம். இதையெல்லாம் காலை தூங்கி எழுந்ததும் செய்யாமல் இருந்தாலே வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் என்கிறார்கள். மகாலட்சுமியின் பேரருளும் கிட்டும். சில நேரங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள்கூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.  

காலை எழுந்திருத்தல்

காலை எழுந்திருக்கும் போது சில விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், லட்சுமி கடாட்சமும் நிலைத்திருக்கும்.  அதே போல் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாகலாம். இதனால் காலையில் எழுந்ததும் சில விஷயங்களை தவிர்த்து விடுங்கள். காலையில் எழுந்ததும் சண்டை, சச்சரவு, கோபம் ஆத்திரம் கூடாது.  சத்தியம் செய்வதைத் தவிர்க்கவும். இதனை தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும்  வீட்டில் எதிர்மறை ஆற்றல் நுழைந்துவிடும்.  காலையில் எழுந்தவுடன் அவரவருக்கு பிடித்த  கடவுளின் திருநாமத்தை  ஜெபிக்கலாம்.  

 காலை எழுந்திருத்தல்

இரவு தூங்கச் செல்லும் முன் பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தப்படுத்திவிட்டு தான் தூங்கச் செல்ல வேண்டும்.  கழுவாத பாத்திரங்களைப் பார்ப்பது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் என்பது ஐதீகம். இத்துடன் நிதி நெருக்கடியையும் சந்திக்க வேண்டியுள்ளது.   ஒருவர் நேரத்தோடு தூங்கி நேரத்தோடு எழுந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.  காலையில் தாமதமாக எழுவது நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. 

அதே போல் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்கக் கூடாது. அதிகாலையில் கண்ணாடியைப் பார்ப்பது அபசகுணமாக பார்க்கப்படுகிறது.  காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்ப்பது அன்றைய நாளில் வேலையை கெடுத்துவிடும்.  அதே போல் காலை எழுந்ததும்  சொந்த நிழலை பார்க்கக் கூடாது.  இதனால் வீட்டில் தகராறு ஏற்படலாம் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web