உஷார்! தொடர் விடுமுறை தினங்கள்! ஏடிஎம் மிஷினை நம்பாதீங்க!

 
இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை!

தமிழகத்தில் தசரா, நவராத்திரி, ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை தினங்களையடுத்து, பல மாவட்டங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் வேலைச் செய்யாமலும், பணமில்லாமலும் பல் இளித்து நிற்கின்றன. உங்கள் வங்கி தேவைகளை சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நமக்கு எப்பவுமே கடைசி நேர பரபரப்பு பழகி இருக்கும். ஆனா, குடும்பத்தோடு வெளியூருக்கோ, ஹோட்டல், கோவில்னு எங்கேயோ அழைச்சுக்கிட்டு போய், கொஞ்சம் இருன்னு சொல்லிட்டு, ஏடிஎம் வாசல்ல க்யூவில நிற்காதீங்க. வங்கி விடுமுறை தினங்களில் ஏடிஎம் இயந்திரங்களை நம்ப முடியாது. பாதி மிஷின்கள் வேலை செய்யாது. மீதி பாதியில பணம் இருக்காது. அப்படியே இருந்தாலும் பெரிய வரிசையில க்யூ இருக்கும். உள்ளே ஒரு அங்கிள் நூறு நூறு ரூபாயா எடுத்துப் பார்த்துக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்து உங்க பொறுமையை சோதிப்பாரு. பண்டிகை காலங்கள் துவங்கியாச்சு. கடைசி நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமலோ அல்லது சரி வர வேலைச் செய்யாமலோ போகலாம். அதனால உங்களோட வங்கி பணிகளை சரியா முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க. அக்டோபர் மாதம் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள என்று பார்க்கலாம் வாங்க. 

அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

ஏ.டி.எம் மூலம் வங்கி கொள்லு

அக்டோபர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறை. 
அக்டோபர் 4ம் தேதி செவ்வாய்கிழமை ஆயுதபூஜை பண்டிகைக்காகவும்,

அக்டோபர் 5ம் தேதி புதன்கிழமை விஜயதசமி பூஜைக்காகவும் வங்கி விடுமுறை.
அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை.
அக்டோபர் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையுடன், மிலாடி நபி பண்டிகைக்காக சேர்த்து விடுமுறை.

அக்டோபர் 22ம் தேதி நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
அக்டோபர் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 24ம் தேதி தீபாவளி விடுமுறை.
அக்டோபர் 30 ஞாயிறு.

ஆக்சிஸ் வங்கி
மேற்கண்ட தேதிகளில் வங்கிகள் விடுமுறை என்பதால் முன்னதாகவே உங்களது பணப்பரிமாற்ற தேவைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பண்டிகை காலங்கள் என்பதால், ஏடிஎம் இயந்திரங்களை நம்பாதீர்கள். அதிகளவில் கூட்டமும், சில இயந்திரங்கள் சரிவர செயல்படாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web