தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கம்

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது.

மேலும் எத்தனை நகைகள் இருந்தாலும் தங்கம் நகைகள் மீது உள்ள ஆசை பெண்களுக்கு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்து தங்கம் வாங்க செல்வதே சிறந்தது என்பதால் தினசரி தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,965-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் குறைந்து, ரூ.3,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web