தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.760 குறைந்து விற்பனை!

 
தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

தங்கம் விலை, இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.760 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

தங்கம்
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாளே உயர்த்தப்படுகிறது. நேற்று தங்கம் விலையில் விற்பனை ஆன நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 95 ரூபாய் குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 760 ரூபாய்  குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,883-க்கு விற்பனையாகிறது.

தங்கம்
இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து, ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web