இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது!

 
தங்கம்

இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் மாறுதலடைந்து வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படும் தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது.

தங்கம் நகைக்கடை

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,911-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web