இல்லத்தரசிகள் அதிர்ச்சி! கடலை எண்ணெய் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்வு!

 
சமையல் எண்ணெய்

உப்பு, புளி, மிளகாய், தனியா துவங்கி, பெட்ரோல், டீசல் வரை தினந்தோறும் தங்கத்திற்கு நிகராக விலை அதிகரித்து வருகிறது. தற்போது கடலை எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. லிட்டருக்கும் ரூ.20 அதிகரித்திருப்பதால், இனி இல்லத்தரசிகளின் மாத பட்ஜெட்  எகிறப் போகிறது. இப்போது தான் வணிக சிலிண்டர் விலை குறைந்தது என நிம்மதி பெருமூச்சு விட்ட ஹோட்டல் நிர்வாகிகளும், உணவக உரிமையாளர்களும் இந்த எண்ணெய் விலை உயர்வுக்கு அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். தேனி, சேலம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்கள், 60 சதவீதம், கர்நாடகா, ஆந்திரா, 40 சதவீதம் என, தமிழக நிலக்கடலை தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதன் அறுவடை முடிவுக்கு வந்ததால், மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருவது சரிந்தது.

இதன் காரணமாக, நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. இதன் எதிரொலியாக விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை  எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. 

சமையல் எண்ணெய்

விருதுநகரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280-க்கும் கடலை எண்ணெய் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.130-க்கும் சூரியகாந்தி  எண்ணெய்ரூ.175-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாமாயில் எண்ணெய்

மேலும், 15 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.2,900-க்கும், நல்லெண்ணெய் ரூ.4,868-க்கும், பாமாயில் ரூ. 2,040-க்கும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web