சூப்பர்!! அடுத்த 3 ஆண்டுகளில் 11000பேருக்கு வேலைவாய்ப்பு!! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!

 
ப்யூஸ் கோயல்


உலகின் முண்ணனி தங்க நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்று  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ். இந்நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில்  இந்தியாவில் ரூ.9,860 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.சமீபத்தில் கொச்சியில் முதலீட்டாளர் வட்ட மேசை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மலபார் குழுமத்தின் தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் இந்தியா ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் இருவரும் ஒன்றாக இணைந்து இதனை அறிவித்தனர்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்டு
இம்மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மாநில தொழில்துறை அமைச்சர் திரு பி. ராஜீவ்,  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், கருவூலம் மற்றும் புல்லியன் பிரிவின் தலைவர் திரு. திலீப் நாராயணனும் கலந்து கொண்டனர். இந்நிறுவனம், அதன் 'மேக் இன் இந்தியா , மார்க்கெட் டு தி வேர்ல்ட் ' முயற்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில்  முதலீடுகளை இரட்டிப்பாக்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 2025 ம் ஆண்டுக்குள்  500 புதிய ஷோரூம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 11,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 


இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்யவும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த முதலீட்டாளர்களின் வட்ட மேசை மாநாடு நடத்தப்பட்டது. இதன் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கவும், விரிவாக்கத் திட்டங்களின் மூலம் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார். மாநாட்டில் இந்நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்டு


உலகம் முழுவதும்  ​​மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 10 நாடுகளில் 280க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும், 5 நாடுகளில் 14 உற்பத்தி அலகுகளையும் நிறுவியுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 4,092 முதலீட்டாளர்களும் மற்றும் 14,169 நிர்வாகப் பணியாளர்களும் உள்ளனர்.  நடப்பு நிதியாண்டில் ரூ.45,000 கோடி வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்பட உள்ளது. மைக்ரோசாஃப்ட், IBM, அக்சென்ச்சர், IBM, E&Y டெலாய்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளின் அடிப்படையில்  இந்நிறுவனம் தனது வணிக மாதிரியை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web