இளைஞரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் மகளுக்கு தாலி கட்டச் செய்த பாசக்கார அப்பா!

 
திருமணம்

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் வசித்து வருபவர்  கெளதம் குமார். இவருக்கு வயது 26. இவர்  எம்ஏ., எம்.பில். பட்டதாரி.  தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார். இவருக்கு நிரந்தரமாக ஒரு வேலை இல்லாமல் சரியாக பெண் அமையவே இல்லை. இந்நிலையில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே அரசுப் பணிக்கான தேர்வுகளையும் எழுதி முயற்சி செய்து கொண்டே இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற  பீகார் அரசு தேர்வாணையத் தேர்வில் கெளதம் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது.  

5வது திருமணம்
 உச்சக்கட்ட மகிழ்ச்சியில்  கெளதம் குமார், இந்த பணி நியமன ஆணையை வாங்கி வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பெற்றோர்  காவல் நிலையத்தில் தங்கள் மகனைக்  காணவில்லை என்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து கெளதம் குமாரை, போலீசார் திருமண கோலத்தில் கண்டுபிடித்தனர்.போலீஸாரை பார்த்ததும் மணமேடையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கெளதம் குமார் அவர்களிடம் தஞ்சம் அடைந்தார்.  

டெல்லி போலீஸ்

பெண்ணின் தந்தை, துப்பாக்கி முனையில் வைத்து தன்னைக் கடத்தி வந்து கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாக கூறி கதறி அழுதார்.  பெண்ணின் தந்தையிடம் விசாரித்ததில்  ”எனது மகளுக்கு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டி வைக்க வேண்டும் என சிறு வயதிலேயே உறுதி எடுத்தேன். அதனால் அரசு வேலை கிடைக்கப் பெற்ற கெளதம் குமாரை கடத்திச் வந்து, எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் கட்டாயத் திருமணம் செய்தல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கெளதம் குமாரை மீட்டு  அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த திருமணத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என போலீஸார் கூறிவிட்டனர். கௌதம் குமாரும் அவரது பெற்றோரும் செய்வதறியாது தற்போது தவித்து வருகின்றனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web