நடிகை கார்த்திகா திருமணம்... குவிந்த பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

 
கார்த்திகா

80 களில் பிரபல கதாநாயகியாக நடித்து  முண்ணணியில் இருந்தவர் நடிகை ராதா. இவர்   ரஜினி, கமல்  உட்பட பல  முண்ணனி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர்.   மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்கள்.  இதில் மூத்தமகள்  கார்த்திகா 'கோ' என்ற படத்தில் ஜீவாவுக்கு  ஜோடியாக  அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து  படவாய்ப்புக்கள் வராததால்  தந்தையுடன் பிசினசில் ஈடுபட்டு வந்தார். 

கார்த்திகா

இந்நிலையில் கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த  புகைப்படங்களை இன்ஸ்டாவில் நடிகை   கார்த்திகா  பதிவிட்டிருந்தார்.  இன்று கார்த்திகா-ரோகித் திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில்   நடைபெற்றது. இந்த திருமண  விழாவில் நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால்   அனைவரும்  குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகில் நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உட்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.  

கார்த்திகா

 விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்று விழாவை சிறப்பித்தனர்.  நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில்  இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web