உஷார்... இதையெல்லாம் செய்யாதீங்க... இந்தியாவில் 69,00,000 வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்!

 
வாட்ஸ் அப்

விஞ்ஞானத்தின் வளர்ச்சி, உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்தாலும், இரு பக்கமும் பிடியில்லாத கத்தியைப் போன்றே இருக்கிறது தகவல் தொழில்நுட்ப துறையில் நாம் காணும் வளர்ச்சிகள். ஆக்கத்திற்கும், நல்ல செயல்களுக்கும் பயன்படுத்துவதை விட, தவறான வழிகளில் அவற்றைப் பயன்படுத்த அடுத்த தலைமுறையில் பலரும் சிந்திப்பது கவலையளிப்பதாகவே இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வேலையை எளிதாக்கும் என்று கெத்தாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டிற்கு வருகிறது. இன்னும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பல நாடுகளிலும் மக்களுக்கு முழுமையாக தெரியாத நிலையில், அடுத்தடுத்து டீப் பேக் வீடியோக்களும், பிரபலங்களின் ஆபாச வீடியோக்களும் வலம் வர துவங்கி விட்டது. அப்படி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனி செயலியாக செயல்பட்டு வருவது வாட்ஸ் -அப் நிறுவனம் பயனர்கள் தேவை, வசதி,தொழில் நுப்ட மேம்பாடு இவைகளின் அடிப்படையில் வாட்ஸ் - அப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் திடீரென 69 லட்சம் கணக்குகளை அதிரடியாக நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

வாட்ஸ் அப்
மோசமான கணக்குகள் என்கிற அடிப்படையில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.   
சமீபத்தில் வாட்ஸ்அப் தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வது முதல் விரும்பிய ஒருவரின் சாட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரைக்கும் சூப்பர்  அப்டேட்டுகள் கொடுத்தது பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.   

வாட்ஸ் அப்
அதேநேரத்தில், வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்களின் whatsapp கணக்குகள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டும் வருகிறது. அதாவது, வாட்ஸ் அப் செயலியின் மூலமாக தவறான கருத்துக்களை பகிர்வது, பிற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் whatsapp கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி   ஐடி விதிகள் 2021ன் படி 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் பல்வேறு மோசமான புகார்களின்  அடிப்படையில் தடை செய்யப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web