உஷார்... நாளை காணும் பொங்கல்... சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம்

 
போக்குவரத்து மாற்றம்

தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் திருநாளை கோலகலமாக கொண்டாடி வரும் நிலையில், நாளை ஜனவரி 17ம் தேதி காணும்‌ பொங்கலை முன்னிட்டு சென்னையில்‌ பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை காமராஜர்‌ சாலையில்‌லும், கடற்கரை செல்லும் சாலைகளிலும் பெருந்திரளான மக்கள்‌ கூடுவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.  இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள்‌ செய்யப்பட உள்ளன.  

போக்குவரத்து மாற்றம்

1. காமராஜர்‌ சாலையில்‌ பொது மக்கள்‌, சாலையில்‌ அதிகமாகும்‌ வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும்‌ செய்யப்படமாட்டாது.  

2. மெரினா கடற்கரைக்கு வரும்‌ வாகனங்கள்‌ காமராஜர்‌ சாலையில்‌ (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும்‌ போது போர்நினைவுச்‌ சின்னத்தில்‌ இருந்து (War Memorial) வரும்‌. வாகனங்கள்‌ வழக்கம்‌ போல்‌ கலங்கரை விளக்கம்‌ (Light house) நோக்கி அனுமதிக்கப்படும்‌. கலங்கரை விளக்கத்தில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ கண்ணகி சிலையில்‌ இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டுபாரதி சாலை பெல்ஸ்‌ சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌.  

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!

3. வாலாஜா சாலையில்‌ இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள்‌ செல்ல தடை செய்தும்‌, பாரதி சாலையில்‌ இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள்‌ அனுமதிக்கவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்‌ பாதையாக மாற்றப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு தறுமாறு  போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web