ரோட்டோர தள்ளுவண்டி கடையில் டீ குடித்த பில்கேட்ஸ்... வைரலாகும் வீடியோ!

 
பில் கேட்ஸ்

நாக்பூர் மாவட்டத்தில், ரோட்டோரத்தில் தள்ளுவண்டியில் டீ ஆற்றி விற்பனை செய்து வரும் டோலி சாய்வாலாவிடம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ஒன் சாய் ப்ளீஸ் என்று கேட்டு, தேநீர் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் போது முதலில் பில் கேட்ஸ் 'ஒன் சாய் ப்ளீஸ்' என்று சொல்வதைக் காண்பீர்கள். அப்போது டோலி தனது தனித்துவமான ஸ்டைலில்  டீயை தயாரிப்பதையும், பில் கேட்ஸ் அதை ரசித்து குடிப்பதையும் வீடியோவில் காணலாம். இறுதியாக டோலி பில் கேட்ஸுடன் வீடியோவுக்கு போஸ் கொடுப்பதைக் காணலாம்.


இந்த வீடியோ தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. மேலும் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "இந்தியாவில் நீங்கள் எங்கு திரும்பினாலும் ஒரு எளிய தேநீர் தயாரிப்பது கூட புதுமையைக் கண்டறியும்!" என்ற தலைப்பில் வீடியோவை பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

டோலி சாய்வாலா நாக்பூரில் சாலையோர டீக்கடை வைத்துள்ளார். அவரது உண்மையான பெயர் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அவரது ஸ்டைலான தேநீர் தயாரிக்கும் பாணியுடன் "டோலி சாய்வாலா" வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் இவரின் வீடியோக்களை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர். இதனால் அவரின் கடைக்கும் ஆட்கள் குவிந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web