‘எதிர்நீச்சல்’ இயக்குநர் திருச்செல்வம் மகளுக்கு திருமணம்... குவிந்த நட்சத்திரங்கள்!

 
திருச்செல்வம் அபிநயா

‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மகளுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் திரைப்பட, சின்னத்திரை நட்சத்திரங்கள் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருச்செல்வத்தின் மனைவியின் பெயர் பாரதி. சிவில் இன்ஜினியரான இவர் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திருச்செல்வத்தின் மகள் அபிநயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல், ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்கிற கதைக்கருவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகைகள் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா  ஆகியோரது நடிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. 

எதிர்நீச்சல் திருச்செல்வம்

இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவலும் ரசிகர்களை சோகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் திருச்செல்வம் மகளுக்குத் திருமணம் முடிந்துள்ளது. இந்த வீடியோவை தொகுப்பாளர் அசார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ’திருமண வரவேற்பு! மணமக்களுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

From around the web