தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 
அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து அதிர்ச்சியளித்திருக்கிறது. மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பாக உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.47,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,784-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 82 ரூபாய் உயர்ந்து, ரூ.4,866-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web