தங்கம் விலை மீண்டும் உயர்வு... அலறும் இல்லத்தரசிகள்... மேலும் உயரவே வாய்ப்பு!

 
தங்கம்

சென்னையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  40 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்க நகைகள்

கொஞ்சம் இறக்கத்தில் இருந்த தங்கத்தின் விலை இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில்  திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக அதிகரித்தது.

ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 சரிந்தது. இதேபோல் புதன்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்தது. தொடர்ந்து 3வது நாளாக வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிந்தது. ஆனால்,  வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்தது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து  ஒரு சவரன் ரூ.46,480-க்கும், கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்க நகைகள்

அதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் நேற்று  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்பட்டது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,355-க்கும், ஒரு சவரன் ரூ. 50,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்திருக்கிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து  5830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 40 ரூ உயர்ந்து 46,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web