நெகிழ்ச்சி... 40 வருஷங்களாச்சு... ஒரே கலர் ஆடைகளில் மொத்தமாய் குவிந்த முன்னாள் மாணவ, மாணவிகள்!

 
சூசையப்பர்

அப்படி இப்படியென நாற்பது வருஷங்கள் உருண்டோடி விட்டது. பலரும் பேரன், பேத்திகளை எல்லாம் பார்த்துட்டாங்க. ஆனாலும், மனசுக்குள்ள அந்த பள்ளி நாட்கள் இன்னும் நிழலாடிக்கிட்டு தான் இருக்கு என்று முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது பள்ளியில் ஒன்றாக ஒரே நிறத்திலான ஆடையணிந்து குழுமியிருக்கிறார்கள். பசுமை நிறைந்த நினைவுகளே , பாடித்திரிந்த பறவைகளே என பள்ளி நாட்களை நினைவு கூறும் வகையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1976 முதல் 1984 வரை 1ம் வகுப்பில் இருந்து 2ம் வகுப்பு வரை ஒன்றாக  தொடக்கக் கல்வி படித்த  20 மாணவிகள் உட்பட 50 பேர்   40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சிவகங்கை


சிவகங்கை சிவன் கோயிலில் ஒன்றிணைந்து அங்கிருந்து மேளதாளம் முழங்க கிராமிய கலைஞர்களுடன் ஊர்வலமாக சென்று பள்ளிக்கூட வாயில் முன்பு மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக நடனமாடி பள்ளி வளாகத்திற்குள் சென்றனர். பள்ளி வளாகத்தில் தாங்கள் படித்த காலத்தில் இருந்த ஓய்வு பெற்ற ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்றனர்.  

சிவகங்கை

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களை கௌரவப்படுத்தி அவர்களிடமும் பழைய மாணவர்கள் ஆசி பெற்றனர். பள்ளிக்கூடத்திற்கு தேவையான மெயின் கேட் மற்றும் தேவையான பொருட்களை பள்ளிக்கு வாங்கி தந்தனர்.  40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பழைய மாணவர்கள் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, ஒன்றாக புகைப்படங்கள் எடுத்து ரசித்து  மகிழ்ந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web