எகிறும் எதிர்பார்ப்பு... இன்று சந்தையில் விற்பனைக்கு வருகிறது ஸியோமி-யின் முதல் எலெக்ட்ரிக் கார்!

 
ஸியோமி எலெக்ட்ரிக் கார்
இன்று சந்தையில் விற்பனைக்கு வருகிறது ஸியோமி எலெக்ட்ரிக் கார். ஸியோமியின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சந்தையில் ஸியோமியின் செல்போன் தயாரிப்புகள்  அதிகளவில் வசீகரித்துள்ள நிலையில், அடுத்த பாய்ச்சலாக ஸியோமி நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் இறங்கி இருக்கிறது. 

சீன நிறுவனமான ஸியோமி, கடந்த 2021-ல் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தடம் பதிக்கப் போவதாக அறிவித்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தங்களது புதிய எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும் என்பதற்கான படங்களையும் வெளியிட்டிருந்தது. 

ஸியோமி எலெக்ட்ரிக் கார்

இந்நிலையில், ஒரு வழியாக மூன்றாண்டு காத்திருப்புக்குப் பின் இன்று மார்ச் 28 முதல் சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரிலான ஸியோமியின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவிருக்கிறது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது ஸியோமி. 

 

ஸியோமி SU7 எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் :

220kW ரியர் வீல் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

E-motor HyperEngine V8s உள்ளதால் அதிகபட்ச மோட்டார் வேகம் 27,200 rpm ஆகும்.

வலுவான 425kW வெளியீடு மற்றும் 635Nm உச்ச முறுக்கு திறன் கொண்டிருக்கும்.

ஸியோமி எலெக்ட்ரிக் கார்

வெறும் 5.3 வினாடிகளில் காரை 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தி க்ளோபல் ரெக்கார்ட் செய்துள்ளதாக ஸியோமி தெரிவித்துள்ளது.

அடாப்டிவ் BEV டெக்னாலஜி, ரோட்-மேப்பிங் வசதி உள்ளது.

SU7 ஆனது LiDAR, பதினொரு HD கேமராக்கள், மூன்று மில்லி மீட்டர் அலை ரேடார்கள் மற்றும் பன்னிரண்டு அல்ட்ராசோனிக் ரேடார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உட்புறத்தில் 16.1-இன்ச் 3K சென்ட்ரல் கன்சோல், 7.1-இன்ச் சுழலும் டாஷ்போர்டு மற்றும் 56-இன்ச் HUD (Heads-up display) உள்ளது.

கூடுதல் வசதி தேவைப்பட்டால் பின்புற இருக்கைகளில் 2 Tablet-களை பொறுத்திக் கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web