கதறும் ஊழியர்கள்... 2,60,000 பேர் வேலையிழப்பு... ஜனவரியில் 30,000 பேருக்கு கல்தா... அடுத்தடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கும் அபாயம்!
கடந்த 2023ல் மட்டுமே சுமார் 2,60,000 ஊழியர்கள் வேலையிழந்தனர். டெக் துறை ஊழியர்களின் வேலைவாய்ப்பு விஷயத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியான நடைமுறைகளைக் கையாள்கின்றன. கடந்தாண்டின் நிலவிய மோசமான சூழல் 2024ம் ஆண்டும் தொடர்வது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதத்தின் பணி நீக்க கணக்கெடுப்பில் டெக் நிறுவனங்கள் பெருமளவில் பணி நீக்கத்தை மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. பிரபல டெக் நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா, நோக்கியா, அக்சென்ச்சர் போன்ற நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினர். அவற்றில் இந்தியாவின் பேடிஎம், ஷேர்சாட், டன்சோ மற்றும் பைஜூஸ் போன்றவையும் அடங்கும். இந்நிறுவனங்கள் ஜனவரியில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. மிச்சமிருக்கும் 11 மாதங்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனவரியில் மட்டும் பல்வேறு டெக் நிறுவனங்களின் 30,375 பணியாளர்கள் பணிகளை இழந்துள்ளனர். இவற்றில் யுபிஎஸ்(12,000), எஸ்ஏபி(8000), கூகுள்(1000), மைக்ரோசாப்ட்(1900), இபே(1000), ஃப்ளிப்கார்ட்(1000) ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
செலவினத்தை குறைப்பது, செயற்கை நுண்ணறிவை சேர்ப்பது ஆகியவை இந்த பணி நீக்கங்களின் பின்னே பிரதானமாக இருந்தன. உதாரணமாக பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான யுபிஎஸ்(யுனைடெட் பார்சல் சர்வீஸ்), செலவினத்தை குறைக்கும் நோக்கில் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. ஜெர்மன் மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி மனித ஊழியர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை சேர்த்ததில் 8,000 பேரை பணிநீக்கம் செய்தது.
ஜனவரியில் கூகுள் நிறுவனம் இரண்டு தனித்தனி பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. முதலில் அதன் பிக்சல், ஃபிட்பிட், நெஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் டீம்களில் 1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்பட்டனர். பிந்தையது அதன் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவில் உள்ள பல நூறு பேரை பணிநீக்கம் செய்கிறது.
கடந்தாண்டின் நெடிய வேலை வெட்டுக்களுக்குப் பிறகு, 2024-லும் மைக்ரோசாப்ட் பணிநீக்க போக்கைத் தொடர்ந்தது. மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் சுமார் 8 சதவீத பணியாளர்கள், அதாவது 1900 பேர் வேலை இழந்தனர். மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், அதன் பிரைம் வீடியோ மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பிரிவில் உள்ள பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த போக்கு சமூக ஊடக தளங்கள், மின் வணிக நிறுவனங்கள் போன்றவற்றிலும் பல்லாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் காரணமானது.
உலகளாவிய இந்த பணிநீக்க அலைக்கு இந்தியாவும் உடன்பட்டது. முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி 6 சதவீத பணியாளர்களை நீக்கியது. விப்ரோ, ஃப்ளிப்கார்ட் போன்றவையும் இந்த பணிநீக்கங்களை தொடர்ந்தன. ஆண்டின் தொடக்கமே அதிரடியாக இருப்பதில், அடுத்து வரும் மாதங்களிலும் காலாண்டு அடிப்படையில் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாக காத்திருக்கின்றன.
கொரோனா காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தி பழக்கியது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு அதிகம் செலவிடுவது, ஏஐ நுட்பங்களின் வருகை, மறுசீரமைப்பு மற்றும் உபரி பணியமர்த்தல் போர்வையிலான பாரபட்சங்கள் என ஊழியர் பணி நீக்கத்தில் 2024 கவலைக்குரிய ஆண்டாகவே தொடங்கி இருக்கிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க