தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; தை அமாவாசை... வார விடுமுறை!

 
அரசு பேருந்து

நாளை தை அமாவாசை திதியை முன்னிட்டும், வார விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டும் பொதுமக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கடற்கரையில், திருச்சி காவேரி ஆறு என பல இடங்களில் புகழ்பெற்ற புண்ணிய நதிகளிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக குவிவார்கள். புகழ்மிக்க ஆலயங்களுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். தை அமாவாசையுடன், தை மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயில்களுக்கும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு செல்வார்கள்.

பேருந்து

இதன் காரணமாக தை அமாவாசையன்று பல்வேறு இடங்களிலிருந்து புனித தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாலும், வார இறுதி விடுமுறை தினங்கள் என்பதாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அமாவாசை

இன்று பிப்ரவரி 8ம் தேதியன்று சென்னை கிளாம்பக்கத்திலிருந்தும் சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே போன்று நாளை பிப்ரவரி 9ம் தேதி தை அமாவாசையன்று  சென்னை கிளாம்பக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த திதியை மறக்காதீங்க!

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web