சூப்பர்... இனி ரிசர்வ் செய்கிற அனைவருக்குமே ரயிலில் இடம் உறுதி... ரயில்வேயின் புதிய திட்டம்!

 
ரயில்

இனி ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்குமே பயணம் செய்வதற்கான இருக்கை உறுதி செய்யப்படுகிற வகையிலான திட்டம் குறித்து ரயில்வே துறை  அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. செளகரியமான பயணம், மலிவான கட்டணம், திட்டமிட்ட நேரத்தில் இலக்கை பெரும்பாலும் சென்று விடலாம் ஆகிய வசதிகள் இருப்பதால் சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒன்றாக ரயில்கள் இருக்கின்றன.

இதனால், ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பண்டிகை நாட்கள் சமயத்தில் ரயில்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய மறு நிமிடமே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகிவிடும். அதேபோல், தட்கல் முன்பதிவிலும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.

தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகைக்கு கூட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு நெரிசல் அதிக அளவு இருந்தது. அதிலும் சூரத் ரயில் நிலையத்தில் பயணிகள் முண்டியடித்து ஏற முயன்ற போது ஸ்டேஷனில் பெரும் களபேரமே ஏற்பட்டது. ரயில்வே மீது கடுமையான விமர்சனங்களுக்கும் வழி வகுத்தது.

இந்த நிலையில், தான் வரும் 2027ம் ஆண்டுக்குள் ரயில் பயணிகள் அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் மெகா பிளானை முன்னெடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். இது தொடர்பாக பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. மெகா ரயில்வே விரிவாக்க திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும் புதிய ரயில்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே நெட்வொர்க்கை விரிவு படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போது நாள் ஒன்றுக்கு இந்திய ரயில்வேயில் 10,748 ரயில்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை 13 ஆயிரமாக அதிகரிக்கவும் ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அடுத்த 3 - 4 ஆண்டுகளுக்குள் 3 ஆயிரம் புதிய ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ரயில்வேயை ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 800 கோடி ஆகும். இதனை ஆயிரம் கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேபோல் பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய வழித்தடங்கள் அமைப்பது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி டூ கொல்கத்தா இடையேயான தொலைவை உடனடியாக பிக் அப் ஆகும் வகையில் வேகம் மற்றும் விரைவாக ரயிலின் வேகத்தை குறைப்பது ஆகியவற்றின் மூலம் பயண நேரத்தை 2 மணி நேரம் 20 நிமிடம் வரை குறைக்க முடியும் என்பது ரயில்வே மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புஷ் அண்ட் புல் தொழில் நுட்பம் மூலம் ரயிலின் வேகம் மற்றும் முடுக்கத்தை சாத்தியப்படுத்த முடியும்.

தற்போது, 225 ரயில்கள் ஆண்டுக்கு புஷ் புல் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் இதன் அளவு 4 மடங்கு அதிகம் ஆகும். இந்த ரயில்கள் விரைவாக இலக்கை எட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம். வரும் 2027ம் ஆண்டுக்குள் ரயில்வே இந்த மெகா பிளானை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் சாத்தியம் ஆனால், ரயில்களில் தற்போது டிக்கெட் கிடைக்க பயணிகள் படும் திண்டாட்டம் இருக்காது என நம்பலாம்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web