நாளை கோடீஸ்வர யோகம் தரும் தை அமாவாசை வழிபாடு!

 
லட்சுமி குபேர பூஜை

நாளை வெள்ளிக்கிழமை. அதனாலென்ன... ஒவ்வொரு வாரமும் தான் வெள்ளிக்கிழமை வருகிறது என நீங்கள் மனதில் நினைப்பது கேட்கிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகள் வரும் என்றாலும்  தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும்  விசேஷமானவை. சாதாரணமாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவை. தட்சியாணம் முடிந்து உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அதிலும், நாளை தை அமாவாசையும் சேர்ந்து வருவது கூடுதல் விசேஷம்.

தை மாத வெள்ளிக்கிழமைகளில், அம்பிகை  ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார். அதே போல் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால் தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை! இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

நாளை தை மாத வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். முடிந்தால், அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வணங்குவது சிறப்பு.

வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும், கண் திருஷ்டியையும்  நீக்கும்.

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை! இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும். தை வெள்ளிக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web