யானை மேல சாமியார்... எடைக்கு எடை துலாபாரம்... 5555 கிலோவுக்கு ரூ.10 நாணயங்களாக ரூ.73.40 லட்சம்!

 
யானை துலா பாரம்

நேர்த்திக்கடனுக்காக குழந்தைகளை துலாபாரமிடும் போது எடைக்கு எடை அரிசியோ பணமோ அல்லது வெள்ளியோ கொடுப்பர்.   ஆனால் ஒரு யானையின் எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமிட்ட அரிதான நிகழ்வு  நடந்தேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் யானையின் எடைக்கு எடை நாணயங்கள் துலாபாரம் செலுத்தப்பட்ட அரிதான நிகழ்வு நடைபெற்றது.

யானை துலா பாரம்

 ஷிரஹட்டி ஃபக்கீரேஸ்வரர் மடத்தின் மடாதிபதி  ஃபகிரா சித்தராம சுவாமி. இவரது  75வது பிறந்த நாளை  சிறப்பாக அனுஷ்டிக்கும் வகையில்  மடத்தின் சார்பில் ஓராண்டு காலம் பாவைக்யதா ரத யாத்திரை நடத்தப்பட்டது. இதனையடுத்து  மடத்தின் 60 வது ஆண்டு விழாவையொட்டி ஜம்போ துலாபாரம் நடைபெற்றது. இதில் யானை மீது தேக்கு மர அம்பாரியில் மடத்து மடாதிபதி ஃபக்கீர சித்தராம சுவாமி அமர்ந்திருந்தார் .  அப்போது யானை துலாபாரத்தில் நிறுத்தி எடை போடப்பட்டது.

யானை துலா பாரம்

 அதன் மொத்த எடை சுமார் 5,555 கிலோவாக  இருந்தது.இந்த எடைக்கு ஈடாக   வங்கிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ10  நாணயங்கள் துலாபாரத்தில் வைக்கப்பட்டன.  இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.73.40 லட்சமாக இருந்தது. இந்தத் தொகை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என மடத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web