அடேங்கப்பா! 119 லட்சம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியீடு!

 
அரசு அலுவலர் பணம் சலுகை ஊதியம்

தமிழகம் முழுவதும் 119 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு தொகை 10 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்  மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொள்ளும் ஊராட்சி மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகள் , கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படிகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்படும் என  முதல்வர் சட்டப்பேரவையில் ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தார்

ஸ்டாலின்

 இது குறித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 1994ல் அளிக்கப்பட்ட உத்தரவுப்படி தற்போது  அமர்வுபடி வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த படி உயர்த்தப்படவில்லை. அத்துடன் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. மற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உயர்த்தப்படவில்லை.

தொடர்ந்து இது குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்படும் அமர்வுப்படியில் இருந்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு  அமர்வுப்படித் தொகையினை 10 மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு 5 மடங்காகவும் உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உட்பட  119 இலட்சம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி மாதம் ஒன்றிற்கு 1 அமர்விற்கு வழங்கப்படும் அமர்வுப்படி தகவல்கள்:

arasanai

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web