அம்மாடி..யோவ்...!! 60000 ரூ10 நாணயங்கள் கொடுத்து கார்!! அசத்தல் முயற்சி!!

 
நாணயம் கார்

தமிழகத்தில் பல பகுதிகளில் ரூபாய் நாணயங்களில் ரூ10 நாணயம் செல்லாது என நம்பப்பட்டு வருகிறது.  பலசரக்கு கடைகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் பல பகுதிகளில் செல்லாது என்ற எண்ணமே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக  10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவித்துள்ளது.  இருந்த போதிலும் , சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகிறது.

தர்மபுரி
இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார் மழலையர் பள்ளி தாளாளர்.  தர்மபுரி மாவட்டம் ஆரூரில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவர் மழலையர் பள்ளி  வைத்து நடத்தி வருகிறார். அவரது தாயார் வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே அவர்களது கடையில் கொடுக்கப்படும் ரூ10 நாணயங்களை சேகரித்து மொத்தம் ரூ.6 லட்சம் சேமித்து வைத்தார்.

10 ரூ நாணயம்

இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணி  ரூ10000 ஆயிரங்களாக பிரித்து கட்டி வைத்தார். ரூ6 லட்சம் சேர்ந்ததும் அதனை கொண்டு   கார் வாங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் ‘ 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி நீங்க வேண்டும்.இந்த விழிப்புணர்வை மக்களிடையே  ஏற்படுத்தவே ரூ10 நாணயங்களை கொண்டு கார் வாங்கினேன் எனத்  தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை