பகீர்! 3 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்!

 
அசுராடீ

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் அந்த சடலத்தை ஐஸ்பெட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் வசித்து வருபவர் அசுராடீ பிரான்ஸ்.  இவருக்கு வயது 31. இவர் தனது 3வயது மகனான சாஸ் ஆலனுடன் வசித்து வந்தார். சம்பத்தில் வீட்டிற்கு வந்திருந்த ஆலனின் பாட்டி, வீட்டில் குழந்தை இல்லாதது குறித்து அசுராடீயிடம் கேட்டுள்ளார். உறவினர் வீட்டிற்கு ஆலன் சென்றுள்ளான் என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
 

அசுராடீ

இதனால் சந்தேகம் அடைந்த ஆலனின் பாட்டி, உறவீனர் வீட்டிற்கே நேரில் சென்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆலன் இங்குவரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் பாட்டியின் சந்தேகம் வலுத்தது. உடனே இது குறித்து அவர் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பிடம் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அசுராடியின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் பாதாள அறை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள். அங்கு இருந்த அறை ஒன்றில் ஐஸ் பெட்டிக்குள் உறைந்த நிலையில் குழந்தை சாஸ் ஆலனின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலனின் தாய் அசுராடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

க்ரைம்

ஆலனின் உடலை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தையின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆலன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் முழு விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது. குழந்தையின் சடலம் எத்தனை நாட்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்தது? எப்படி கொலை நடந்தது? என்பது குறித்த சந்தேகங்களுக்கு விடை தெரியாமல் போலீசார் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

பெற்ற குழந்தை என்று பாராமல் அதன் தாய் ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் அசுராடியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web