பகீர்!! நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற அனுமதி கிடையாது!! தடகளவீரர் சர்ச்சை புகார்!!

 
தடகளவீரர்

ஜூன் 29ம் தேதி பின்லாந்து நாட்டில் உலக அளவிலான மாஸ்டர் தடகள போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 195 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இதில் இந்தியா சார்பில் 75 முதல் 80 வயதோருக்கான போல்வால்ட் போட்டியும் ஒன்று. இதில் கலந்து கொள்ள 79 வயதான சுப்பிரமணி என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தடகள வீரர்

இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஆவார். பின்லாந்தில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள சுப்பிரமணி தனது சொந்த செலவில் பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் சுப்பிரமணி பயிற்சி மேற்கொள்ள விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அதிகாரிகள் இதுவரை தனக்கு அனுமதி அளிக்கவில்லை சுப்பிரமணி புகார் அளித்துள்ளார்.


75 முதல் 80 வயதோருக்கான போல்வால்ட் போட்டி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தனது 79 வயதையும் பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொள்ள விண்ணப்பித்த தன்னை அதிகாரிகள் அவமானப்படுத்தி உள்ளனர்.இதனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை தமிழக அரசு தலையிட்டு களைய வேண்டும். மேலும் நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

நேரு உள்விளையாட்டு அரங்கம்
சுப்பிரமணியின் விளையாட்டு ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அதிகாரிகள் புரிந்து கொண்டு விளையாட்டு அரங்கில் அவர் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று பொது நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல உதவிகளை செய்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது குறித்து அதிகாரிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web