பகீர்!! தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!! மத்திய சுகாதாரத் துறை கடிதம்!!

 
கொரோனா

இந்தியாவில் கொரோனாவின் 3 அலைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2020 மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி மூலம் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் கொரொனா மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா

அதே போல் உலக அளவிலும்  சீனா உட்பட பல  நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அடுத்த அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 அந்தவகையில், இந்தியாவில் தற்போது, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலும்  கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

கொரோனா
இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன்  கொரோனா பரவல் குறித்து  மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழகம், கேரளா உட்பட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உடனடியாக விரைந்து போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும்  அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web