தனியார் பள்ளி விற்பதாக ரூ.1 கோடி மோசடி.. ஆசிரியர் தம்பதிகள் அதிரடியாக கைது!

 
ஜெயமூர்த்தி

திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 45). சோழியநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தயாநிதி (44), அவரது மனைவி அனிதா (40). இவர்களில் தயாநிதி நெடிமொழியனூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும், அனிதா சோழியநெற்குணத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இருவரும் சோழியநெற்குணத்தில்  எஸ்.கே.டி. என்ற பெயரில் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்தனர்.இருவரும் 2022ல் பள்ளியை விற்க முடிவு செய்தனர்.இதையறிந்த ஜெயமூர்த்தி மற்றும் சிலர் சோழியநெல்குணத்தில் உள்ள பள்ளிக்கு சென்று தயாநிதி மற்றும் அனிதாவிடம் கேட்டனர். இருவரும் பள்ளியை ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டனர்.

இதற்காக இருவரும் ஜெயமூர்த்தியிடம் இருந்து பல தவணையாக ரூ.75 லட்சத்தை முன்பணமாக பெற்று, தங்கள் பள்ளியை ரூ.50 பத்திரத்தில் 13.11.2022 அன்று விற்க பதிவு செய்யப்படாத விற்பனை ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.பின்னர் தாங்கள் நடத்தி வந்த மெட்ரிகுலேஷன் பள்ளியை ஜெயமூர்த்தி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு ஜெயமூர்த்தி பள்ளியின் பெயரை மாற்றி பள்ளியை நடத்தி வந்தார். இந்நிலையில் தயாநிதி மற்றும் அனிதாவிடம் சென்று பள்ளியின் அசல் ஆவணங்களை ஜெயமூர்த்தி கேட்டுள்ளார்.

இருவரும் பள்ளியின் அசல் ஆவணங்களை நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளதாகவும், ரூ.1 கோடி கொடுத்தால் தான் அசல் ஆவணங்களை தருவதாகவும் தெரிவித்தனர். பள்ளி இருக்கும் இடத்தில் வில்லங்கம் இருப்பதை உணர்ந்த ஜெயமூர்த்தி, இருவரிடமும் சென்று அசல் ஆவணங்களை கொண்டு வந்தால் , பணம் தருகிறோம், இல்லையெனில் நான் கொடுத்து பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என கூறி பள்ளியை அவர்களிடம் கடந்த ஜூன் 2023இல் ஒப்படைத்தார்.

அதன் பிறகு தயாநிதி, அனிதா இருவரும் பள்ளியை ஜெயமூர்த்திக்கு விற்காமல் ஏமாற்றி புதுச்சேரியைச் சேர்ந்த சண்முகத்திடம் விற்று,   ஜெயமூர்த்தியிடம் ஏற்கனவே வாங்கிய முன்பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த ஜெயமூர்த்தி, இருவரிடமும் சென்று, எங்களை ஏமாற்றி, பள்ளியை வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் புதுச்சேரியை சேர்ந்த பழனி மனைவி லதாவிடம் பள்ளியை விற்று தருவதாக கூறி இருவரும் ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

ஜெயமூர்த்தி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாநிதி மற்றும் அனிதாவை கைது செய்தனர். பின்னர் இருவரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார். விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியை விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web