அதிர்ச்சி... விமான நிலையத்தில் பெண் பயணி கைது... ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

 
நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.அ வரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வ தேச விமானநிலையத்தில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண் பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் காலை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து சென்னைக்கு வந்தது. பின்னர் அந்த விமானம் டெல்லிக்கு செல்ல வேண்டி இருந்ததால், அதற்கு முன்பாக பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஏர் இந்தியா விமானம்

அப்போது விமானத்தில் இருக்கை ஒன்றின் கீழ் பார்சல் ஒன்று இருந்ததை பணியாளர்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது அதில் பசை வடிவில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை ஆய்வு செய்தபோது, 1.25 கிலோ தங்கப்பசை இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 73 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து துபாயில் இருந்து விமானத்தில் தங்கப்பசை கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் தொடரும் கடத்தல்! ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

இதேபோல நேற்று முன்தினம் மதியம் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக சென்று வந்த சென்னையை சேர்ந்த 45 வயது பெண் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் 5 தங்க செயின்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் எடை 473 கிராம் ஆகும். மதிப்பு 26.27 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அந்த பெண் பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web