அயோத்திக்கு நன்கொடையாக 1 லட்சம் குட்டி லட்டுகள்... திருப்பதி தேவஸ்தானம்... !

 
திருப்பதி

ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான  ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திறப்பு விழா கும்பாபிஷேக நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விவிஐபிக்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்  காணிக்கைகள், பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ராமருக்கு பட்டு அங்கவஸ்திரம், 5000 வைரக்கற்கள் பதித்த டைமண்ட் நெக்லஸ்,  பிரம்மாண்ட லட்டு,  45 நாட்கள் தொடர்ந்து நறுமணம் வீசும் ஊதுவத்தி என  குவிந்து வருகிறது.  சீதா தேவிக்கு வாழை நார் புடவை ஒன்று பக்தர்கள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி

இதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஒரு லட்சம் லட்டுக்கள் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிப்பு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி  ஒவ்வொரு லட்டும் சுமார் 25 கிராம் எடையில் தயாரிக்கப்படும் .    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  உறுப்பினர் சௌரப் போரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ30 லட்சம்  நெய்யை நன்கொடையாக வழங்கினார்.

திருப்பதி லட்டு

இந்த நெய்யில் அயோத்திக்கு அனுப்பபட உள்ள நெய்யை தயாரிக்கவும்  சௌரப் போரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதன் அடிப்படையில் நன்கொடையாக வழங்கப்பட்ட நெய்யில் அயோத்திக்கு அனுப்பப்படும் லட்டு தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த லட்டுக்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்  ராம பக்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே  திருப்பதி அறக்கட்டளை சார்பில் தினசரி  சுமார் 4 லட்சம் லட்டுகளை  தயாரித்து திருமலையில் உள்ள பக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web