உதயநிதியின் தலைக்கு ரூ10 கோடி!! சர்ச்சை சாமியார்!!

சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகளும், கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாயை அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்துள்ளார். இன்று அவரது மடத்தில், உதயநிதிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன், அமைச்சர் உதயநிதியின் உருவப்படத்தை வாளால் குத்திக்கிழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், டெல்லி, பீகார் மாநிலங்களில் உதயநிதி மீது புகாரும் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை எரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஜல சமாதி அடைய போகிறேன் என விளம்பரம் செய்துகொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்னதாக ராமர் குறித்து பேசிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தலையை சீவி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஷுவ ஹிந்து பரிஷத் தலைவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, எனது தலையை நானே சீவ முடியவில்லை . ஏற்கனவே எனக்கு வழுக்கை விழுந்து விட்டது என நகைச்சுவையாக குறிப்பிட்டு அதற்கு பதில் தந்திருந்தார் கருணாநிதி. அதே வகையிலான சர்ச்சை கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!