நவம்பரில் 10 நாட்கள் வங்கி விடுமுறை... பண பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கோங்க!
இன்றுடன் அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் மற்றும் விடுமுறை நாட்கள் ரிசர்வ் வங்கியின் மூலமே நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வங்கிப்பணிகளை திட்டமிட்டு பயனடையலாம்.

நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்:
நவம்பர் 1 : சனிக்கிழமை கன்னட மாநில தினம் : கர்நாடகாவில் வங்கி விடுமுறை.
நவம்பர் 2 : ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 5 : புதன்கிழமை குருநானக் ஜெயந்தி மற்றும் கார்த்திகை பௌர்ணமி
நவம்பர் 7: வெள்ளிக்கிழமை ஷில்லாங் பகுதியில் வாங்கலா திருவிழா காரணமாக வங்கிகள் மூடப்படும்.
நவம்பர் 8 : 2 வது சனிக்கிழமை

நவம்பர் 9 : ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 16 : ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 22 : 4 வது சனிக்கிழமை
நவம்பர் 23 : ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 30 : ஞாயிற்றுக்கிழமை
மொத்தத்தில், நவம்பர் மாதம் முழுவதும் 10 நாட்கள் வரை வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கிப்பணிகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளுதல் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
