குடை எடுத்திட்டு போங்க... 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தின் பல பகுதிகளில் காலை வேளைகளில் பனிமூட்டம் நிலவி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று 1 0 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளது.

மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை  உட்பட  வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.  

கன மழை

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்து வந்தது.  இன்று காலை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web