10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்னிந்தியப் பகுதிகளின் மீது நிலவும் வலுவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (09-10-2025) மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நீலகிரி (ஓரிரு இடங்களில்)
கனமழை பெறக்கூடிய மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் (மலைப்பகுதி)
தேனி
ஈரோடு
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருப்பத்தூர்
வேலூர்
இராணிப்பேட்டை
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
இதே நாளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் அக்டோபர் 11ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 12ம் தேதி கோயம்புத்தூர் (மலைப்பகுதி), நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை
அக்டோபர் 13 ம் தேதி கோயம்புத்தூர் (மலைப்பகுதி), நீலகிரி, ஈரோடு
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்னிந்தியப் பகுதிகளின் மீது நிலவும் வலுவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
