பயங்கர வீடியோ... பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உடல் சிதறி பலி!!

 
பட்டாசு விபத்து

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர்12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் பகுதியில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


 

இந்நிலையில் வெற்றியூர் அருகே ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஊழியர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் விபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பட்டாசு விபத்து
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் திருச்சி சரக டிஐஜி பகலவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web