10 வயது மாணவி பள்ளி வளாகத்தில் மர்ம மரணம்... தாய் கதறல்!

 
பள்ளி மாணவி


தலைநகர் டெல்லியில் பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து தொடர் விசாரணை நடத்த வேண்டும் என  மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவி மரணமடைந்து 18 நாள்களாகியும் காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை என தாயார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.தில்லி புறநகர்ப் பகுதியான நொய்டா செக்டார் 31 பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் செப்டம்பர் 4ம் தேதி 6 ம் வகுப்பு மாணவி தனிஷ்கா சர்மா, மயங்கி விழுந்துள்ளார்.  அந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் பள்ளி ஆசிரியர்கள் அனுமதித்த நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உணவு அருந்தும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  பிரேத பரிசோதனை அறிக்கையில்  'காரணத்தை உறுதி செய்ய முடியாத மரணம்' எனக் குறிப்பிடப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மாணவி தனிஷ்கா சர்மாவின் தந்தை, கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இதையடுத்து, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவரது தாய் திரிப்தா சர்மாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார்.  தனிஷ்காவின் மரணம் குறித்து அவரது தாயார் திரிப்தா சர்மா, முகநூல் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  
"எனக்கு மலர் போன்ற ஒரு மகள் இருந்தாள். செப்டம்பர் 4 ம் தேதி ஆசிரியர் நாள் கொண்டாட்டத்துக்காக ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றார்.  எனது மகளை நான்தான் பள்ளியில் இறக்கிவிட்டேன். காலை 11.30 மணிக்கு  ஆசிரியர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் மகள் மயங்கி விழுந்துவிட்டதாக கூறிவிட்டனர். உடனடியாக நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.   பள்ளி என்பது 2 வது வீடாக கருதி, பாதுகாப்பாக இருப்பார்கள் என தான் குழந்தையை அனுப்புகிறோம்.  பள்ளியிலேயே என் மகள் உயிரிழந்துவிட்டாள். மதிய உணவு சாப்பிடும்போது தனிஷ்கா உயிரிழந்ததாக பெற்றோர்களிடம் முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், ட்டுகளில் இருந்து இறங்கும்போது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் சிசிடிவி காட்சிகளை மாணவியின் தாயாரிடம் பகிர மறுத்தது சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது. பள்ளியின் சிசிடிவி கேமிராக்களில் கோளாறு இருந்ததாகவும், மாணவி விழுந்ததாக கூறப்படும் பகுதி கேமிரா கண்காணிப்பில் இல்லை என  பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளியின் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர்.  அதேபோல், மாணவி மயங்கியவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பள்ளியின் முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றதால், விலைமதிப்பற்ற தங்கள் மகளின் உயிரை இழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  பள்ளிக்கல்வித் துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதால், இதுவரை காவல்துறை தரப்பில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை அறிக்கையில்  மாணவியின் உடலில் வெளிப்புறக் காயங்கள் ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?