அதிர்ச்சி... டெங்குவால் 10 வயது சிறுவன் பலி.. கதறித் துடித்த பெற்றோர்!!

 
டெங்கு

பொதுவாக தமிழகத்தில் அக்டோபரில் பருவமழை பெய்ய ஆரம்பித்து விடும்.  நடப்பாண்டில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை. விவசாயிகளும், பயிர்களும் வாடி கிடக்கின்றன. ஆனால் மழைக்காலம் தொடங்கும் முன்னரே பருவ கால நோய்கள் தொடங்கிவிட்டன. அந்த வகையில் டெங்கு பரவல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது.  அதன்படி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு
சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பத்தில் வசித்து வரும்   சிறுவன் சரவணன். இவருக்கு வயது 10. இவர் அக்டோபர் 8ம் தேதி முதல்   காய்ச்சலால் கடும் அவதிப்பட்டு வந்தான்.  
சிறுவன் காய்ச்சலுக்கு முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ரத்தப்பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய தொடங்கின இதனையடுத்து  மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டான்.  கடந்த ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.  

 

டெங்கு
சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைதல், ரத்தம் உறைதல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்தன. இதனால் அதற்குரிய  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தான். ஆனால்  டெங்குவால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web