வீடியோ...அவரோட தலைய சீவுனா ரூ100கோடி நான் தர்றேன்!! சீமான் சர்ச்சை பேச்சு!!

 
சீமான்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர்  சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சை சாமியார் உதயநிதியின் தலைக்கு ரூ10கோடி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து நாடு முழுவதும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி சீமான் ’’சாமியார் என்பவர் எல்லாவற்றை விட்டுவிட்ட பற்று அற்றவனாக இருக்க வேண்டுமே தவிர, தலை வெட்டுவேன் என்பதால் சாமியார் பேசுவதா? நான் கூட சொல்கிறேன் சாமியாரின் தலையை வெட்டி வருபவனுக்கு ரூ100 கோடி நான் தருகிறேன்’’ என  தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான், ‘’முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் நாம ஏன் கவலைப்பட வேண்டும். எனக்கு தமிழ்நாடு தான். ’இந்து’ என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே? அதையும் மாற்ற வேண்டியது தானே?  ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே? இந்தியா என்ற பெயரை எடுத்து விட்டு, வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா? ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர முடியவில்லை. இன்று டெல்டாவில் பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும் அவ்வளவுதான். இங்கு இருக்கக் கூடிய திராவிட கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து தான் உள்ளது. இப்போது திமுக எதிர்க்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி அதனை ஆதரித்துதான் இருந்தார்.

சீமான்

அதுக்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது?இப்பவும் சொல்கிறேன் ராமநாதபுரத்தில் தாமரையுடன் சூரியன் நேரடியாக மோதினால் நான் வேட்பாளரை நிறுத்த மாட்டேன். அதை திமுக செய்யுமா? அதே போல மக்களவைத் தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள். நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.  
அயோத்தி சாமியார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர்.தம்பி உதயநிதி ஒரு கருத்தை முன் வைத்தால் அதனை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தலையை வெட்டுவேன் கையை வெட்டுவேன் என்பதெல்லாம் சரியான பேச்சா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web