ஸ்ஸ்...ப்பா... இப்பவே கண்ண கட்டுதே.... பல பகுதிகளில் 100டிகிரி வெயில்!

 
வெயில்

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மழை காலத்தில் கொட்டும் மழை வெயில் காலத்தில் கொளுத்தும் வெயில் என காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி முடிவுக்கு வர இல்லை. அதற்குள் தமிழகத்தின் சில பகுதிகளில்  வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.  தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.  

வெயில்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  பிப்ரவரி 12ம் தேதி வரையிலும் வறண்ட வானிலேயே நிலவும் என அறிவித்துள்ளது. அதன் பிறகு  தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பொழியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி பிப்ரவரி 7   மற்றும் பிப்ரவரி  8 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே  நிலவக் கூடும்.  அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் இருக்கலாம்.  பிப்ரவரி 9   முதல் பிப்ரவரி 12  வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே  நிலவக் கூடும். பிப்ரவரி 13 ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும். 

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை   அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்ப நிலையாக  31 - 32 டிகிரி செல்சியசும்,   குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியசும்   இருக்கக் கூடும்.  நேற்றைய நிலவரப்படி   ஈரோட்டில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 91.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web