தமிழகம் முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்... டிஜிபி உத்தரவு!

 
டிஎஸ்பி

தமிழகம் முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்களை மாற்ற வேண்டும் என இது குறித்து அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கையை செயல்படுத்தும் வகையில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கர் ஜிவால்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.  சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  

தமிழ்நாடு போலீஸ்

சென்னையில் மட்டும் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடைபெற இருக்கிறது. இதனையொட்டி  தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web