100% வரிவிதிப்பு... அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சீனா அதிரடி!
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக மோதல் புதிதாக வலுவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற நவம்பர் 1 முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக சீனா அதிகாரிகள் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என அறிவித்து, நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உரிமைகளை உறுதியாக பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிக வரிகள் விதிப்பு என்ற அச்சுறுத்தல்கள் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. நாம் வர்த்தகப் போரில் ஈடுபட விரும்பவில்லை. இருப்பினும், நாங்கள் இதனால் பயப்படவில்லை” என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார சூழலை பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களில் அமெரிக்கா சீன பொருட்களுக்கு 145 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து சீனா 110 சதவீத வரி விதித்து எதிரொலித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்புக்கு சீனா திடீர் பதிலடி கொடுத்து, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் வர்த்தக போரினால் தனது சட்டபூர்வ உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும், அவசியமான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக வர்த்தக சூழல் மேலும் பதட்டமானதாக மாறவுள்ளது. இரு மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் இடையிலான நிலை, இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வர்த்தக தொடர்புகளையும் பாதிக்கும் என்பதால் வணிக வட்டாரங்கள் கவனமாக நிலையை கண்காணிக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
