அசத்தல் உலக சாதனை... 1000 கலைஞர்கள் ஒரே மேடையில் நடனநிகழ்ச்சி.!

 
பரதம்

திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை அடிவாரத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக குழந்தைகளின் நடன நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஐந்து வயது முதல் 50 வயது வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.நடன நாட்டிய நிகழ்ச்சிக்காக சென்னை , பெங்களூர் ,திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து நடன கலைஞர்கள் பழனிக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நடனம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாட்டியம் ஆடுவதற்கு தகுந்தாற்போல் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து நடனம் ஆடினர். முருகனைப் போற்றி எழுதப்பட்ட பாடல்கள் ஆன பழனி திருப்புகழ், காவடி சிந்து, சுப்ரபாதம் ஆகியவை 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக குழந்தைகளால் நடனம் ஆடினார்கள்.
இதுவரை நடன நாட்டியத்தோடு காவடியையும் இணைத்து ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது இதுவே முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

நடனம்
இந்த நிகழ்ச்சியை விர்ஷா உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் செய்து சான்றிதழை வழங்கியது. விர்ஷா உலக சாதனை அமைப்பு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்சிகளை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. நடன நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web