1000 மல்லர் கம்பம் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி... விழுப்புரத்தில் உலக சாதனை!

 
விழுப்புரம்
 

தமிழகத்தில் மல்லர் கம்பம் விளையாட்டை நிறுவிய உலக துரையின் 85வது பிறந்த நாளையொட்டி, ஒரே நேரத்தில் 1000 மல்லர் கம்பம் வீரர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மல்லர் கம்ப கழக துணைத்தலைவர் சின்ராஜ் தலைமை வகித்தார்.

விழுப்புரம்

விளையாட்டு மேம் பாட்டு ஆணைய மண்டல மேலாளர் சுஜாதா, ஒலிம்பிக் சங்க இணை செயலாளர்  பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லர் கம்பம் கழகத்தின் புரவலர் பொன்.கௌதமசிகாமணி நிகழ்வை தொடங்கி வைத்தார்.மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  மல்லர் கம்ப வீரர்கள் ஒரே நேரத்தில் 100 கம்பங்களில் ஏறி, 15 நிமிடங்களில் உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தினர். இன்ஜினியர்ஸ் சார்ம் உலக சாதனை அமைப்பு நிர்வாகி ஆனந்தராஜேந்திரன், மக்லின் ஜான்வசந்த் ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்வை பதிவு செய்தனர்.

விழுப்புரம்இதனை தொடர்ந்து மல்லர் கம்பம் கழக நிறுவனர் உலக துரை ஏற்புரையாற்றினார். மல்லர் கம்பம் கழகத்தின் சிறப்பு தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், தெலங்கானா மாநில மல்லர் கம்பம் கழகத்தின் செயலர் திலிப்காவானே, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!