மாதம் ரூ1000 உரிமைத் தொகை ரூ1/- அனுப்பி சோதனை!!

 
மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு   மாதம் ரூ1,000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில்   முதல்வர் மு.க.ஸ்டாலின்   சட்டமன்ற கூட்டத்தொடரில்  மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்தார். 

1000

இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இணைய 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருத்தனர். அவா்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தகுதியுள்ள விண்ணப்பதாரா்களின் வங்கிக் கணக்குகளை சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரா்களின் வங்கிக் கணக்குக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

உரிமைத்தொகை
தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கைப்பேசி வழியாக விண்ணப்பதாரா்களைத் தொடா்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. 
மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், மிகையளவு மின்சார பயன்பாடுதான் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் விண்ணப்பங்கள்தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுள்ளளன. இதைத் தொடா்ந்து, ஆண்டு வருமானம் அதிகமுள்ள விண்ணப்பங்களும் தகுதியிழப்புக்கு ஆளாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web