பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000.. பீகாரில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

 
1000
 


பீகார் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாதந்தோறும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் , பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக நிதீஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த வாரம் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதற்குமுன் வாக்காளர்களை கவர அரசு புதிய திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் பீகாரில் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பீகாரில் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் மாதம் தலா ரூ. 1,000 பெற உள்ளனர். இந்த திட்டப்படி இளைஞர்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை மாதம் தலா ரூ. 1000 பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துடன் சேர்த்து இளைஞர்களுக்கு இலவசமாக திறமை வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?