அக்டோபர் 1ம் தேதி 1000 சிறப்பு டெங்கு மருத்துவ முகாம்கள்.. அமைச்சர் அதிரடி!!

 
மருத்துவ முகாம்

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்   அதிகரித்து வருகிறது. இதனால் எல்லை பகுதிகளில் முழு பரிசோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே  போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக  அங்காங்கே நீர் தேங்கி கொசு உற்பத்தி காரணமாக டெங்கு பரவி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் ஏற்படும் தீவிர காய்ச்சல் காரணமாக  சில உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.

மெகா மருத்துவ முகாம்

இதனையடுத்து  டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக  அரசு மேற்கொண்டுள்ளது. அத்துடன் அரசு மருத்துவமனைகளில் டெங்குவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம்  முழுவதும் அக்டோபர் 1ம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என  மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில் “  தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன்  பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

அக்டோபர் 1ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.  அத்துடன்  மருத்துவ குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த உள்ளனர். பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web